நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ
கொல்கத்தா: போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்கத்தில் போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாரதா என்ற செய்தி இணையதளம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் படங்கள், வீடியோக்களை வெளியிட்டிருந்தது.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திடீரென பாஜகவில் சேர்ந்தார். ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவில் இருந்து சோவன் சட்டர்ஜி வெளியேறி இருந்தார்.

மேலும் மேற்கு வங்க அமைச்சரவை கடந்த வாரம் பதவியேற்ற அன்றே நாரதா வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஜகதீன் தன்கார் அனுமதி அளித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications