உள்நாட்டு பாதுகாப்பு பற்றி ராஜ்நாத் சிங் பேச.. குறட்டை விட்டு தூங்கிய சிபிஐ இயக்குநர்!!
குவஹாத்தி: காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசும் போது சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் 49 வது டிஜிபி- ஐஜி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்குடன் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இம் மாநாட்டில் ராஜ்நாத்சிங் பேசிக் கொண்டிருந்த போது, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா நன்றாகத் தூங்கிவிட்டார்.
இதை அங்கிருந்த பத்திரிகையாளர்களும் மற்றும் தொலைகாட்சி ஒளிப்பதிவாளர்களும் படம் பிடித்தனர். தாம் தூங்குவதை செய்தியாளர்கள் படம் பிடிப்படை அறிந்து கொண்ட சின்ஹா விழித்து கொண்டார்.
ரஞ்சித் சின்ஹா தூங்குவதைப் பார்த்துவிட்டுதானோ என்னவோ ராஜ்நாத்சிங்கும், இங்கே நிறைய உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். சிலர் தங்களது ஓய்வு காலத்தை நெருங்கி இருக்கின்றனர் (சில நாட்களில் சின்ஹா ஓய்வு பெற உள்ளார்).
நீங்கள் ஓய்வு பெறவில்லை... நீங்கள் சோர்ந்துபோய்தான் உள்ளீர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications
