கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டம்
கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோர சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது.

6 நாட்கள் அனுமதி
எனினும் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு கடந்த 4-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து சென்றனர்.

இந்திராணி முகர்ஜி முன்பு விசாரணை
இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரித்தது.

சிபிஐ காவல் நீட்டிப்பு
இந்நிலையில் நேற்று அவரது காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

முன்னுக்கு பின் முரணாக தகவல்
அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவர் பெயர் என்ன என்று கேட்டால் தான் ஒரு அரசியல்வாதி என்று தெரிவிப்பதாக தகவல்கள் வந்தன. மேலும் வீட்டு சாப்பாடுதான் வேண்டும் அடம்பிடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஒத்துழைப்பு இல்லை
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் இன்னும் ஒரு நாளில் முடிவடைய போகிறது. மீண்டும் காவலை நீட்டித்து கேட்க வாய்ப்புகள் இல்லை என்று சிபிஐ கருதுகிறது. அவர் மழுப்பலான பதிலை அளித்து விசாரணை ஒத்துழைக்காததால் சிபிஐ விழி பிதுங்கி நிற்கிறது.

டெல்லி நீதிமன்றம்
இதுபோல் ஒருவர் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அவருக்கு நீதிமன்றத்தின் அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்த விசாரணை குழு கேட்கும் உரிமை உள்ளது. அதன் படி கார்த்திக்கும் உண்மை கண்டறியும் சோதனை (narco analysis test)நடத்த டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்தி ஒத்துழைப்பாரா?
அதே வேளையில் இந்த சோதனை யாருக்கு கண்டறியப்படுகிறோ அவர் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. எனவே கார்த்தி சிதம்பரம் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications