கொஞ்சம் ஓய்வு.. அலுவலக பணி.. அப்பறம் பேட்டி.. தர்ணா பந்தலிலும் கடுமையாக உழைக்கும் மமதா!
கொல்கத்தாவில் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
Recommended Video

கொல்கத்தா: கொல்கத்தாவில் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதியில் அவர் தர்ணா இருந்து வருகிறார். கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரும் அவருடன் சேர்ந்து தர்ணா இருந்து வருகிறார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலர் மமதா தர்ணா இருக்கும் இடத்தில் கூடி இருக்கிறார்கள். அதேபோல் சில வேறு மாநில தலைவர்களும் மமதாவை சந்திக்க வர இருப்பதாக கூறப்படுகிறது.

தர்ணாவை தொடங்கினார்
கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை குற்றம்சாட்டி சிபிஐ நேற்று அவரை கைது செய்ய முயன்றது. இதை தடுக்கும் வகையில் கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது. அதன்பின் அந்த சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இது தொடர்பாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
|
இரவு அதே இடம்
நேற்று இரவு அதே இடத்தில்தான் மமதா இரவு முழுக்க அமர்ந்து இருந்தார். அதே இடத்தில்தான் அவர் இரவு முழுக்க இருந்தார். அங்கு மிகவும் குளிரான வானிலை நிலவியதால், முகத்தை துணி வைத்து மூடிக்கொண்டு அதே இடத்தில் தர்ணா இருந்தார். அதிகாரிகளும் அவருடன் இருந்தனர்.

கொஞ்ச ஓய்வு
அதன்பின் இன்று அதிகாலை அவர் தன்னுடைய வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின் மீண்டும் தர்ணா நடக்கும் இடத்திற்கு காலையில் வந்தார். காலையில் இருந்து அவரை பல்வேறு அதிகாரிகளை, கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்கள். அங்கு திரிணாமுல் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.
|
வேலை
அதேபோல் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். இன்று காலையில் தனது எம்எல்ஏக்களுடன் அவர் சில ஆலோசனைகளை நடத்தினார். அதன்பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின் கோப்புகளுக்கு கையெழுத்திட்டார். அந்த தர்ணா பகுதி அவரின் சிறிய அலுவலகமாக மாறியுள்ளது.

தேர்தல் பணி
அதேபோல் லோக்சபா தேர்தல் பணிகளையும் இவர் இன்னொருபுறம் கவனித்து வருகிறார். இது தொடர்பாக தனது கட்சியினரிடம் இவர் காலை தர்ணா பந்தலில் பேசினர். இத்தனைக்கும் மத்தியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்? -
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications