லோக்சபா தேர்தலில் பிசியாக இருக்கும் நடிகர், நடிகைகள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் பலர் போட்டியிடுவதுடன் பிரச்சாரமும் செய்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் நடிகைகள் ஹேமமாலினி, நக்மா, கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
மேலும் பல நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

நக்மா
நடிகை நக்மா உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். அவர் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பேசியதைவிட அவர் பட்டபாடுகளை பற்றி தான் மக்கள் அதிகம் பேசுகிறார்கள்.

ராஜ் பாபர்
நடிகரும், காங்கிரஸாருமான ராஜ் பாபர் மீரட்டில் நக்மாவுக்காக பிரச்சாரம் செய்தார். ராஜ் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல் பனாக்
ஆம் ஆத்மி கட்சி சார்பில் சண்டிகரில் முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான குல் பனாக் போட்டியிடுகிறார்.

ராக்கி சாவந்த்
இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சியை துவங்கி நாடாளுமன்ற தேர்தலில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், பட தயாரிப்பாளருமான போனி கபூருடன் சேர்ந்து ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதராவக பத்தேஹ்பூர்சிக்ரியில் பிரச்சாரம் செய்தார்.

அனில் கபூர்
இந்தி நடிகர் அனில் கபூர் சண்டிகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை கிரண் கேருக்கு வாக்கு சேகரித்தார்.

விவேக் ஓபராய்
நடிகர் விவேக் ஓபராய் பாஜக வேட்பாளர் நிதின் கட்காரிக்கு ஆதரவாக நாக்பூரில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.

ஜாவித்
லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜாவித் ஜாப்ரி பைக்கில் வாக்கு சேகரித்தார்.

அனுபம் கேர்
தனது மனைவி கிரண் கேருக்கு ஆதரவாக நடிகர் அனுபம் கேர் இளம் தலைமுறையினரிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

மோனிகா பேடி
நடிகை மோனிகா பேடி காங்கிரஸ் வேட்பாளர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணமுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஹேமமாலினி
உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார்.

கிரண்
நடிகை கிரண் கேர் சண்டிகரில் பிரச்சாரம் செய்தபோது தனது கணவருடன் பேசி மகிழ்கிறார்.

பாரேஷ் ராவல்
குஜராத் மாநிலம் அகமதாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இந்தி நடிகர் பாரேஷ் ராவல் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.

சத்ருகன் சின்ஹா
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹா தனது மனைவியுடன் பாட்னாவில் பிரச்சாரம் செய்தார்.

ரதி
நடிகைகள் ரதி மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் மெகேவுக்கு வாக்கு சேகரித்தனர்.
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications