ஓம் பினிஷாய நமஹ... தோனிக்கு வீரேந்திர ஷேவாக் செம வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனது கணவர் டோணிக்கு அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
டெல்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனது கணவர் தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்து சாதனை படைத்தார்.
2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கிரிக்கெட்டி பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
|
யாரும் இருக்கமுடியாது
டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, லெஜன்ட் எம்எஸ் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து.. உங்களை போல் யாரும் இருக்கமுடியாது. என கூறியுள்ளார். மேலும் தோனி கேக் வெட்டிய பிறகு எடுத்த போட்டோவையும் அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
அழகாக்கியமைக்கு நன்றி
இதேபோல் தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களின் மனித நேயத்தை வார்த்தைகள் கூறமுடியாது. 10 ஆண்டுகளாக உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். கற்றுக்கொள்கிறேன்.. வாழ்க்கையை நேர்மையாகவும் ப்ராக்ட்டிக்களாகவும் வாழ வைப்பதற்கு நன்றி.. என்னுடைய வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு அளவில்லாத அன்பும் நன்றியும் உங்களுக்கு.. இவ்வாறு சாக்ஷி தெரிவித்துள்ளார்.
|
ஓம் பினிஷாய நமஹா!
வீரேந்திர ஷேவாக் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் எம்எஸ் தோனி.. உங்கள் வாழ்க்கை இந்த நீளத்தை விட நீண்டதாக இருக்கும்.. மேலும் உங்களின் ஸ்டம்பிங்கை விட வேகமாக, எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காணலாம். ஓம் பினிஷாய நமஹா!
|
பிசிசிஐ வாழ்த்து
பிசிசிஐ பதிவிட்டுள்ள டிவிட்டில், ஸ்பெஷல் - அவரது சக தோழர்களிடமிருந்து மிகவும் விசேஷமானவர், அவர் தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இறுதி வரை பாருங்கள் - அழகான எச்சரிக்கை!
|
தலைசிறந்த கேப்டன்
ஆர்பி சிங் பதிவிட்டுள்ள டிவிட்டில், 2 உலக கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் ட்ரோபி, 3 ஐபிஎல் கோப்பைகள் இதுபோன்ற பட்டியல் நீளும்.. இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications