கோஹினூர் வைரத்தை திரும்ப பெற சுமுகமான முறையில் நடவடிக்கை: மத்திய அரசு திடீர் பல்டி
டெல்லி: கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோஹினூர் வைரமானது 105 காரட் மதிப்பு கொண்டது. இது தான் தற்போதுவரை உலகின் மிகப்பெரிய வைரமாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரமானது, பலரிடம் கைமாறி இறுதியில் கடந்த 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது. அப்போது முதல் பிரிட்டன் மன்னரின் பரம்பரை சொத்தாக மாறிய அந்த வைரம், தற்போது மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த கிரீடமானது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் இளவரசர் வில்லியமை மணந்துள்ள இளவரசி கேத்மிடில்டன், அடுத்த மகாராணியாக பட்டம் ஏற்கும்பட்சத்தில் இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் அவரைச் சென்றடையும்.
இந்நிலையில் கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் அவ்வப்போது கோரிக்கை எழுந்து வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம், இங்கிலாந்து அரசால் திருடிச் செல்லப்படவும் இல்லை, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை.
மகாராஜா ரஞ்சித் சிங்கால் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதனால், கோஹினூர் வைரம் மீதான உரிமையை இந்தியா விட்டுக் கொடுத்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் நிலையில் ஒரே நாளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று இரவு மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோஹினூர் வைரம் பற்றிய மத்திய அரசின் கருத்து, இன்னும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்தி, உண்மையின் அடிப்படையில் அமையவில்லை.
இந்த நேரத்தில், கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது. இதில் சுமுக தீர்வு உருவாகும் என்று இந்திய அரசுக்கை நம்பிக்கை உள்ளது இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications