ஃபிக்ஸட் டெபாசிட்களின் மீதான வருமான வரிக்கு விலக்கு கிடைக்குமா?
வங்கிகளில் சேமிக்கப்படும் நிரந்தர வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கான வருமான வரிக்கு விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Recommended Video

டெல்லி: வங்கிகளில் சேமிக்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டிக்கான வருமான வரிக்கு இன்றைய பட்ஜெட்டில் விலக்கு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டான 2018-2019-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.

ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி உள்ளிட்டவைகளில் ஏதேனும் விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரி சேமிக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80 சி-யின் கீழ் பிடிக்கப்பட்ட தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த சேமிப்பு தொகை மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்தியே தீரவேண்டும்.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நிரந்தர வைப்பு நிதிக்கு 6 சதவீத வட்டியை தருகிறது. அதுபோல் மூத்த குடிமக்கள் என்றால் 6.5 சதவீதம் வட்டி கொடுக்கிறது.
இந்த சேமிப்புகளின் கீழ் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு அதை நிரந்தரமாக வங்கியில் டெபாசிட் செய்து வட்டியை பெற்றுக் கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை எக்காரணத்தை கொண்டு எடுக்க முடியாது. அல்லது அதிலிருந்து கடன் பெறவோ முடியாது. ஆனால் வட்டித் தொகையையும் முதலீட்டாளர் விரும்பினால் மீண்டும் முதலீடு செய்யலாம். இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்படலாம் என்று சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில நிபுணர்கள் இந்த சேமிப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு விலக்கு கிடைக்கும் என்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இதற்கான விடை தெரியவரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications