யாருங்க இந்த பெண்? டாக்டர் கிட்ட திடீர்னு "முக்காடு" போட்டு.. மெடிக்கல் ஷாப்ல நொந்துட்டாங்க.. சபாஷ்
கான்பூர்: ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியை ஒட்டுமொத்த இணையவாசிகளும், பொதுமக்களும் திரண்டு சென்று பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. ஏன் தெரியுமா?
சில மாதங்களுக்கு முன்பு, மக்களவையில் மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கும்போது முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களை நியமிப்பது, அதற்கான தகுதி மற்றும் சம்பளம் போன்றவை அந்தந்த மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டதாகும். பார்மஸி தொழில் ஒழுங்குபடுத்துதல் விதிமுறைகள் 2015 என்னும் சட்டத்தை ஒன்றிய பார்மஸி கவுன்சில் உருவாக்கியுள்ளது.
பார்மஸிகள்: அதன்படி, டி. பார்ம் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் பல பிரிவுகளில் பணிபுரிய விதிகளில் இடமளிக்கப்பட்டுள்ளது. மருந்தாளுனர்கள் மருந்து சீட்டு எழுதி தருவதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இதற்கு காரணம், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்துகள் விதிகள், 1945-ன் படி குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால்தான், மருந்தகங்களில் அதிரடி ஆய்வுகள், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கைகள் போன்றைவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலாவதி மருந்துகள்: 01.04.2023 - 31.12.2023 வரை, அதாவது 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழலில், யாருமே எதிர்பாராத வகையில், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, திடீரென மெடிக்கல் ஷாப்புக்கும், மருத்துவமனைக்கும் திடீரென உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டுள்ளார்.. அதுவும் நோயாளியை போலவே அங்கு நுழைந்து, ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்..
ஐஏஎஸ் அதிகாரி: உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் பகுதியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பொறுப்பில் உள்ளவர் க்ரதி ராஜ்... இவர் 2021 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.. அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில், டியூட்டி நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்றும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார்கள் வந்தன. அதேபோல, அங்கிருக்கும் மெடிக்கல் ஷாப்பில், காலாவதியான மருந்துகளை விற்பதாகவும் புகார்கள் குவிந்தன.
இதனால், பெண் அதிகாரியான க்ரதி ராஜ், தனக்கு வந்திருக்கும் புகார்கள் எல்லாம் உண்மைதானா? என்பது குறித்து நேரடியாக விசாரணை நடத்த முயன்றார்.. இதற்காக, நோயாளி போல மருத்துவமனைக்குள் நுழைந்தார்.. யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு, தலையில் முக்காடு போட்டுக் கொண்டார்..
மெடிக்கல் ஷாப்: முதலில் மருத்துவமனைக்குள் நுழையாமல், மெடிக்கல் ஷாப்புக்கு போனார்.. சில மருந்துகள் வேண்டும் என்று கேட்கவும், மெடிக்கல் ஷாப்பில் உள்ளவர்களும் பழைய மருந்தை எடுத்து தந்திருக்கிறார்கள்.
மருந்துகள் அனைத்தும் காலாவதியாகியிருப்பதை உறுதி செய்த அந்த பெண் அதிகாரி, மருத்துவமனை வார்டுக்கு சென்றார்.. அப்போது, ஊசி, மருந்துகள் எதையுமே நோயாளிகளுக்கு சரியாக வழங்கப்படாததை கண்டறிந்தார்.. பிறகு, அங்குள்ள டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்தது போன்று சில டெஸ்ட்களையும் செய்துகொண்டார்.

டாக்டர்கள் கையெழுத்து: அப்போது மருத்துவரின் பணி ஒழுங்கின்மையை கண்டறிந்தார்.. பிறகு, வருகை பதிவேட்டை பார்த்தால், டாக்டர்களின் கையொப்பமிருக்கிறது.. ஆனால், பலர் டியூட்டியில் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தார்.. மருத்துவ பணியாளர்களும் பணியில் இல்லாதது போன்ற பல்வேறு விதிமீறல்களை க்ரதி ராஜ் இந்த நேரடி ஆய்வின்போது கண்டறிந்தார்.
இறுதியில், அனைத்து விதிமீறல் அனைத்தும் குறித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க க்ரதி ராஜ் உத்தரவிட்டார். இதனால், அந்த மருத்துவமனையே ஆடிப்போய்விட்டது.. டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். மெடிக்கல் ஷாப்களில் காலாவதி மருந்துகள் உட்பட மருத்துவமனையில் ஆய்வு செய்யும் காட்சிகள் அனைத்துமே வீடியோவாக, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பாராட்டுக்கள்: ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, நோயாளி போல வேடமிட்டு, ஒரு மருத்துவமனையை சற்று நேரத்தில் அதிர செய்த சம்பவம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.. அத்துடன், பொதுமக்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications