வதேராவுக்கு விமான நிலையங்களில் சோதனையிடுவதிலிருந்து விதி விலக்கும் அளிக்கும் உத்தரவு ரத்து
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விமான நிலையங்களில் சோதனையிடப்படுவதிலிருந்து அளிக்கப்பட்டு வந்த விதி விலக்கை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விதி விலக்கு தனக்குத் தேவையில்லை, தாராளமாக நீக்கிக் கொள்ளலாம் என்று வதேராவே சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த சலுகையை தற்போது மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த உத்தரவுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு சிவில் விமானப் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்படும் என்றார்.
33 வகையான பிரமுகர்களின் பட்டியலில் இதுவரை வதேரா இருந்து வந்தார். இவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சிவில் விமானநிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படாமல் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலிலிருந்து தற்போது வதேரா நீக்கப்படுகிறார்.
எஸ்பிஜி எனப்படும் கருப்புப் பூனைப் பாதுகாப்பு அளிக்ககப்படுவோர்தான் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். இந்தப் பட்டியலில் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதிலிருந்து வதேரா மட்டும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு முன்பு கூறுகையில், இவரிடம் என்ன விசேஷம் இருக்கிறது. இவர் என்ன அவ்வளவு சிறப்பு வாய்ந்த மனிதரா. மற்ற இந்தியக் குடிமக்களை விட இவர் விசேஷமானவரா. நான் அப்படி நினைக்கவில்லை. இவருக்கு சிறப்புச் சலுகை தேவைப்படுவதாகவும் நான் கருதவில்லை என்று கூறியிருந்ாதார்.
இந்தப் பட்டியலிலிருந்து வதேரா மட்டுமே நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்பட்டியலில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications