மாட்டிறைச்சியை விடுங்க.. தைரியம் இருந்தா நாகாலாந்து நாய் கறி மேல கை வைங்க பார்ப்போம்!
மாட்டிறைச்சிக்கு மறைமுக தடை விதித்தவர்களால் நாகாலாந்தில் கொடூரமாக விற்பனை செய்யப்படும் நாய்கறி விற்பனையை தடை செய்ய முடியுமா? என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னை: நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மறைமுக தடை விதித்தவர்களால் நாகாலாந்து என்கிற சின்னஞ்சிறிய மாநிலத்தில் படுகொடூரமான நாய் கறிவிற்பனைக்கு தடை விதிக்க முடியுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாடுகள் விற்பனையை ஒழுங்குமுறைபடுத்துவதாக கூறி மாட்டிறைச்சிக்கு மறைமுக தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதற்கு எதிராக தென்னிந்திய மாநிலங்கள் தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றன.
இதேபோல் வடகிழக்கு மாநிலங்களும் மாட்டிறைச்சிக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பாஜகவும் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் இரட்டை குரலில் பேசி வருகின்றன.

கொம்புகளுக்கு நோ பெயின்ட்
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட கூடாது; மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமே பூசக் கூடாது என்றெல்லாம் கூட மத்திய அரசின் மாடு விற்பனை ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன. அதாவது மாடுகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதையே இந்த ஒழுங்குமுறை விதிகள் கேள்விக்குள்ளாகுகின்றன.

நாய்கறி விற்பனை
மாடுகளுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கும் மத்திய பாஜக அரசால் நாகாலாந்தில் மிக கொடூரமாக அரங்கேறும் நாய் கறி விற்பனையை தடை செய்ய முடியுமா? என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். நாகாலாந்தில் ஆடு, கோழி, மாடு இறைச்சி போல நாய்க்கறி விற்பனையும் பிரதானமானது.

நாய் கடத்தல்...
இதற்காக அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் கூட நாய்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு 75 நாய்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

கொடூரமாக கொலை
இந்த நாய்களை பிடித்து வாயை கட்டி தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் சாக்குகளில் போட்டு அடைக்கின்றனர். இறைச்சி கூடத்துக்கு கொண்டு செல்லப்படும் இந்த நாய்கள் உயிருடன் தடிகளாலும் இரும்பு கம்பிகளாலும் துடிக்க துடிக்க அடித்தே கொல்லப்படுகின்றன. இந்த கொடூரங்களைப் பார்க்கிறவர்கள் ஒருநாளும் இறைச்சியே சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.

மேனகா முயற்சி
அவ்வளவு கர்ண கொடூரமான இந்த நாய் கறி விற்பனையை தடை செய்ய மத்திய அமைச்சர் மேனகா காந்தி முயற்சித்துப் பார்த்தார். ஆனால் எங்கள் பண்பாட்டின் மீது கைவைப்பதா? என நாகாலாந்து கிளர்ந்தது. இதனால் தற்போதும் மத்திய அரசு எதுவும் செய்யாமல் இருக்கிறது.

உணவில் தலையீடு கூடாது
நாகாலாந்து நாய்கறி விற்பனையையும் ஒழுங்குமுறைபடுத்தலாம் மத்திய அரசு. அதற்கு தடை விதிப்பது என்பது ஏற்க முடியாதது. ஒரு இனக்குழுவின் பண்பாட்டு அடையாளத்திலும் உணவு உரிமையிலும் யாரும் எதன்பேரிலும் தலையிடவே முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications