பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு.. நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு
அமிருதசரஸ்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கபடும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவருக்கு வயது 95. பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்த முதல்வர்களில் இளம் வயதிலேயே முதல்வர் ஆனவரும் இவர்தான். 43 வயதில் முதல்வரானார்.

30 ஆவது வயதில் 1957 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் 1967, 2022 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே அவர் தோல்வியை தழுவியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிரா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறி தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதையே திருப்பி கொடுத்தார் பிரகாஷ் சிங் பாதல்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications