'மேக் இன் இந்தியா' லோகோ சுவிஸ் வங்கியில் இருந்து சுடப்பட்டதா? மத்திய அரசு மறுப்பு!!
டெல்லி: பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 'மேக் இன் இந்தியா'வுக்கான லோகோ, சுவிஸ் நாட்டின் வங்கியின் லோகோவைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘மேக் இன் இந்தியா' என்ற திட்டம் பிரதமர் நரேந்திரமோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் லோகோவாக தொழில்துறை சக்கரங்கள் உள்ளடக்கிய சிங்கத்தின் படம் இடம்பெற்று உள்ளது.

இந்த படம்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் மண்டல வங்கியின் விளம்பர படம் போல இருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சுவிஸ் நகரில் ஓடும் ரயில்களில் அந்த வங்கியின் விளம்பரம் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் அந்த இடம்பெற்றுள்ள சிங்க லோகோவைப் போலவே மேக் இன் இந்தியாவின் லோகோவும் இருக்கிறது.
இதனால் சுவிஸ் வங்கியின் லோகோவை இந்தியா பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து உள்ளது.
இதுகுறித்து தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் அமிதாப் கான்ட் கூறுகையில், மேக் இன் இந்தியா லோகோவில் உள்ள சிங்கம் துடிப்பானவை. சுவிஸ் வங்கியின் லோகோவில் உள்ளது போல் சலிப்பான, மந்தமான சிங்கங்கள் இல்லை. மேக் இன் இந்தியாவில் உள்ள சக்கரங்கள் தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை குறிப்பதாக அமைக்கப்பட்டு உள்ளது. மிக பழமையான காலத்தில் இருந்தே சிங்கம் இந்தியாவின் உத்தியோகப்பூர்வ சின்னமாக இருந்து வருகிறது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications