காவிரி பிரச்சனையால் தமிழகம், கர்நாடகாவின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது: சந்திரபாபு நாயுடு
காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகாவின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது என சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஆந்திராவை வறட்சியே இல்லாத மாநிலமாக மாற்றுவோம். சித்தூர் மாவட்டத்தில் வறட்சி ஏதும் இல்லாத நிலைமையை உருவாக்குவோம்.
தமிழகம், கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இது இருமாநில மக்களின் உணர்வுகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக போலவரம் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.












Click it and Unblock the Notifications