ஆந்திராவில் பாஜக + TDP கூட்டணிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? சந்திரபாபு நாயுடுவின் கணக்கை பாருங்க
அமராவதி: ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் லோக்சபாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். அங்கு ஜெகனுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என முழங்குகிறார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில், ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

ஆந்திராவை பொறுத்தவரை அங்குள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வியூகம் வகுத்துவருகிறார். 47 வயதான சந்திரபாபு நாயுடு இதற்காக மாநிலம் முழுக்க அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும் 6 இடங்களில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜேஎஸ்பி கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில், நெல்லூரில் நடைபெற்ற தேதல் பிரசார கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, டிடிபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 160 + இடங்களில் வெற்றி பெறும். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியானது. அதில், படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். வேலை கிடைக்கும் வரை, டிகிரி முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications