''என்டே கம்பெனியும், உம்மன் சாண்டியும்'': சரிதா நாயர் பரபர பேட்டி
கொச்சி: எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் முதல்வர் உம்மன் சாண்டி தான். அவருக்கு நான் ரூ.1.90 கோடியை நிவாரண நிதிக்கு அல்ல லஞ்சமாகத் தான் அளித்தேன் என சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது பல புகார்கள் தெரிவித்துள்ளார். மோசடி வழக்கை விசாரித்து வரும் கமிஷன் முன்பு ஆஜரான அவர் தான் சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் அளித்ததாக கூறினார். ஆனால் உம்மன் சாண்டி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்நிலையில் சரிதா பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறுகையில்,
நான் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள் மூலம் அவருக்கு ரூ. 1.90 கோடி அளித்தேன். அது அவர் கூறுவது போன்று நிவாரண நிதிக்காக அல்ல மாறாக அவருக்கு தான் லஞ்சமாக அளித்தேன்.
என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் உம்மன் சாண்டி தான் என்றார்.












Click it and Unblock the Notifications