தாலிபான்கள் பிடியில் ஆப்கான்... இந்தியாவுக்கு சவால்.. வியூகங்களை மாற்ற வேண்டிய தருணம்: ராஜ்நாத்சிங்
குன்னூர்: தாலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால்; அதனால் பாதுகாப்பு தொடர்பான நமது வியூகங்களை - உத்திகளை (யுக்திகளை) மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழகத்தின் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு நேற்று வருகை தந்தார். இன்று வெலிங்டன் மையத்தில் ராணுவ அதிகாரிகளிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:
நமது நாட்டுடனான 2 யுத்தங்களில் அண்டை நாடு (பாகிஸ்தான்) தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது அந்த நாடு.

பாக். மீது கடும் அட்டாக்
நிழல் யுத்தம், பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த அத்தியாயமாக, அரசாங்கத்தின் கொள்கையாகவே மாறிவிட்டது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்வது, நிதி உதவி அளிப்பது, பயிற்சி கொடுப்பது என அத்தனையையும் பாகிஸ்தான் செய்து வருகிறது. நாட்டின் வடக்கு எல்லையில் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு கடந்த ஆண்டு ஒருதலைப்பட்சமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சர்ஜிகல் தாக்குதல்கள்
நம்மால் மட்டுமே நமது மண்ணில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது. தேவைப்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிரான அந்த நாட்டுக்குள்ளும் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். எல்லையில் பாகிஸ்தானுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நமது வலிமைதான். 2016-ல் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினோம்; 2019-ல் பால்கோட்டில் தாக்குதல் நடத்தினோம். அதன்மூலம் நமது வலிமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பாக எந்த விலை கொடுத்தேனும் எதிரியை எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயார் என்பதை மீண்டும் நிரூபித்தோம்.

சீனா ஊடுருவல்
எல்லையில் சீனா படைகள் முன்னேறிய தருணத்தில் நான் ராணுவ தளபதியுடன் இரவு 11 மணிக்கு ஆலோசனை நடத்தினேன். அப்போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நமது ராணுவ வீரர்கள் தீரத்துடன் அந்த ஊடுருவலை எதிர்கொண்டு தடுத்தது பாராட்டுக்குரியது.

ஆப்கானும் சவால்களும்
ஆப்கானிஸ்தானில் நிலைமைகள் மாறி இருப்பது இந்தியாவுக்கு சவாலானது. இத்தகைய நிலைமைகளால் இந்தியா தனது வியூகங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாம் நமது வியூகங்களை மாற்றி வருகிறோம். குவாட் எனப்படும் நான்கு நாடுகள் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா) கூட்டமைப்பும் கூட நமது வியூகங்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் உருவாக்கப்பட்டதுதான். எதிரிகளை எதிர்த்துப் போராட ஒருங்கிணைந்த யுத்த குழுக்கள் தேவை. இத்தகைய குழுக்களை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. யுத்த காலங்களில் விரைவாக முடிவெடுக்க இந்த குழுக்கள் தேவைப்படுகிறது. இத்தகைய குழுக்களின் எண்ணிக்கையையும் நாம் அதிகப்படுத்த வேண்டிய நிலைமையும் உள்ளது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications