காஷ்மீரின் அடையாளத்தையே மாற்றப்போகும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம்.. வெளியான சூப்பர் தகவல்
ஸ்ரீநகர்: உலகின் உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். இதனால் இந்த பாலம் திறப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் உலகின் சொர்க்கம் என்று சொல்லும் அளவுக்கு இயற்கை அன்னை பல அற்புதங்களை அங்கு ஒளித்து வைத்திருக்கிறது. அங்குள்ள
ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் ரியாசி நகரங்களை செனாப் நதி பிரிக்கிறது.
அந்த இரு பகுதிகளையும் இணைக்க வடக்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள் மூலம் இணைக்கும் ரயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் திட்டத்திற்கு கிரீன் சிக்னல் கிடைத்தது . ஆனால் 20 வருடங்களுக்கு பிறகே இந்த பாலம் முடியும் நிலையை எட்டி உள்ளது. கட்டுமானப் பணிகள் 2004 இல் தொடங்கப்பட்டாலும், அதிவேகக் காற்று காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2008-09 ஆம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டது.

1468 கோடி மதிப்பு
அதன்பின்னர் இப்பகுதியின் நில அதிர்வு உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கடந்த 2018-ல் இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. 28 ஆயிரம் டன் இரும்பு கொண்டு இந்த பாலம் ரூ.1,486 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சர்
இமயமலையில் இந்த பாலம் சுமார் 193 மீட்டர் உயரம் மற்றும் 725.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயரமான இந்த கேபிள் பாலம் அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் இது பயன்பாட்டுக்கு வரும்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரெயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். மேலும் ஜம்முவை ஸ்ரீநகருடன் இணைக்கும் ரயில்வே பாதை டிசம்பர் 2023 அல்லது ஜனவரி 2024க்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். "...அனைத்து சோதனைகளும்...வெற்றிகரமாகிவிட்டன. தற்போது, பாலம் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இது ஜே-கே-க்கு மிகப் பெரிய விஷயம். இந்த பாலம் பொறியியல் அதிசயம் என்று கூறினார்.

எத்தனை வருடம்
இது குறித்து வடக்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும் போது, "இப்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலம் 40 கிலோ வெடி பொருட்கள் வெடிப்பையும் தாங்கக்கூடிய திறன் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ரயில் போக்குவரத்து
இந்த பாலத்தில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க போகிறோம். மணிக்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றை இந்த பால எதிர்கொள்ளும். அது மட்டுமின்றி இதில் ஏராளமான சென்சார்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார். இந்த ரயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் பெரிய அளவில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் வரும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications