ரயிலை தடம் புரள செய்வதே தீவிரவாதிகள் நோக்கம் – சென்னை குண்டுவெடிப்பு பற்றிய ”திடுக்” தகவல்
பெங்களூர்: கவுகாத்தி ரயிலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பானது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒருவேளை இந்த வெடிப்பானது ரயில் புறப்பட்டதும் நடந்திருந்தால், கண்டிப்பாக மிகப்பெரும் அழிவாக இருந்திருக்கும்.

சென்னையிலிருந்து புறப்பட்டால் அந்த ரயிலானது தமிழ்நாட்டை 65 கிலோமீட்டர் கடந்தாக வேண்டும். இந்த குண்டுவெடிப்பு குறைந்த வீரியம் உடைய வெடிபொருளால் நடந்திருந்தாலும், ரயில் நகரும்போது வெடித்திருந்தால் ரயிலே தடம் புரண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
"ரயில்கள் தடம் புரள்வது கடினமான ஒன்றுதான்.மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருள் கலவையால் டிசம்பர் 6 ந்தேதியன்று ஆழப்புழா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது" என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒருவேளை குண்டுகள் பெட்டிகளின் அடியில் பொருத்தப் பட்டிருந்தால் இழப்புகள் பெரிதாக இருந்திருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அந்த வெடிபொருள் கலவை வீரியம் குறைவாக இருந்திருந்தால், ரயில் பெட்டிகளை பாதித்திருக்காது.ஆனால், இந்த குண்டானது ரயில் நகரும்போது பயங்கர வெடிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது" என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகள் இதுபற்றி கூறும்பொழுது, சில பைப்கள் வெடிபொருள் இருந்த பையில் குறுக்காக வைக்கப்பட்டிருந்தது.இதனால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தது என்று தெரிவித்தனர்.மேலும், குண்டுகளில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர் உபயோகித்திருந்ததும் தெரியவந்துள்ளது.
முன்னாள் தடவியல் நிபுணரான வரதராஜூ இதுபற்றி கூறுகையில், "தீவிரவாதிகள் ரயிலை தடம் புரளச் செய்யும் நோக்கத்தில்தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.ஆனால், ரயில் தாமதத்தால் பேரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications