வெள்ளத்தால் சென்னையில் விமான சேவை ரத்து: டிக்கெட் கேன்சல் சார்ஜை ரத்து செய்ய விமான நிறுவனங்கள்
மும்பை: வெள்ளத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை என்று பல விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
டிசம்பர் 6ம் தேதி நண்பகல் 12 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னைக்கு மற்றும் சென்னையில் இருந்து கிளம்ப டிக்கெட் வாங்கியவர்களுக்கு அதற்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் அல்லது வேறு தேதிகளில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும்.
விமானங்கள் குறித்து தகவல் அறிய பயணிகள் www.jetairways.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் அல்லது விமான நிறுவனத்தின் கால் சென்டருக்கு 39893333 போன் செய்யவும். விமான சேவை மாற்றம் குறித்த தகவல்கள் டிராவல் ஏஜெண்டுகளிடம் உள்ளது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications