நிஃப்ட் தலைவராக பாஜக முன்னாள் எம்.பி. சேத்தன் சௌஹான் நியமனத்துக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு
டெல்லி: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட்-ன் புதிய தலைவராக பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் வீரருமான சேத்தன் சௌஹான் நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேத்தன் செளஹான் நியமனத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) துணைத் தலைவரான முன்னாள் எம்.பி. சேத்தன் செளஹான் நிஃப்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், நிஃப்டின் புதிய தலைவராக மத்திய அரசு என்னை நியமித்துள்ளது. அந்தப் பதவியில் திறம்படப் பணியாற்றுவேன் என்றார்.

ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதாவது:
சேத்தன் சௌஹானை நிஃப்ட் கல்வி நிலையத்தின் தலைவராக பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு நியமித்துள்ளது. மோடியின் அரசு எப்போதும் தங்களுக்கு துதிபாடுபவர்களையே முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அமர்த்தி வருகிறது.

புனே பிலிம் இன்ஸ்டியூட் தலைவராக கஜேந்திர சௌஹான், சென்சார் போர்டு தலைவராக பஹ்லாஜ் நிஹலானி, மத்திய அமைச்சராக ஸ்மிருதி இரானி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications