கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீங்க
காந்திநகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனர் (மனைவியின் தம்பி) திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் சேதேஸ்வர் புஜாரா. இவர் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்தார். மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜரா 7,195 ரன்கள் குவித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் புஜாரா தனது ஓய்வை அறிவித்தார். தற்போது புஜாரா ராஜ்கோட்டில் வசித்து வருகிறார். புஜாராவின் மனைவி பெயர் பூஜா பாபரி. இவரது தம்பியின் பெயர் ஜீத் பாபரி. இவர் ராஜ்கோட்டில் வசித்து வருகிறார். ஜீத் பாபரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. மனைவி மற்றும் தாயுடன் அவர் வசித்து வந்தார்.
ராஜ்கோட்டில் உள்ள மாளவியா நகரில் இருக்கும் காலவாட் ரோட்டில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தார். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் செய்து வந்த ஜீத் பாபரிக்கு வயது வெறும் 30 தான். இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி புஜாராவின் மைத்துனர் ஜீத் பாபரி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை பார்த்து அவரது தாய் மற்றும் மனைவி அலறினர்.
உடனடியாக ஜீத் பாபரியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு ஜீத் பாபரியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மாளாவியா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜீத் பாபரி கடந்த சில மாதங்களாக அப்செட்டில் இருந்து வந்துள்ளார். அதாவது கடந்த 2024ம் ஆண்டில் அவர் மீது பலாத்கார புகார் வழங்கப்பட்டது. ஜீத் பாபரிக்கும், ஒரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அந்த பெண்ணே ஜீத் பாபரி மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் இருந்த நிலையில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அப்செட்டில் இருந்து வந்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி ஜீத் பாபரி மீது அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். அதே தேதியில் ஓராண்டு கழித்து நவம்பர் 26ம் தேதி அவர் தற்கொலை செய்துள்ளார். இதனால் அவரது தற்கொலைக்கு பாலியல் பலாத்கார புகார் தொடர்பான வழக்கு தான் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications