கொரோனா வைரஸ் அச்சம்: சத்தீஸ்கர், மத்திய பிரதேசததில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
போபால்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 44 பேர் கொரோனா அறிகுறியுடன் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனையில் சத்தீஸ்கரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனினும் சத்தீஸ்கரில் கொரோனா பரவும் அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளா மற்றும் டெல்லி மாநிலங்களில் பள்ளிகளுகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவும் வேகமாக அதிகமாக உள்ளது. இதுவரை 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடாவில் 76 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். இவர் தான் இந்தியாவில் கொரோனாவால் இறந்த முதல் இந்தியர் ஆவார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications