Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஸ்கர்: 'எடுத்த சபதம் முடிப்போம்'- 75 சீட்டை தட்டி தூக்குவோம்.. பாஜகவுக்கு காங். தலைகள் சவால்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் 75 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மாநிலத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது.

Chhattisgarh Assembly Election: Congress will get 75 seats- KC Venugopal

2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவுக்கு வெறும் 15 இடங்கள்தான் கிடைத்தன. முந்தைய தேர்தலை விட பாஜக 34 இடங்கள் குறைவாக பெற்றது அக்கட்சியினரை மூர்ச்சை அடைய வைத்தது. அந்த அளவுக்கு பாஜகவில் உட்கட்சி பூசல், பாஜக அரசு மீது அதிருப்தி அலை வெடித்திருந்தது.

இதனையடுத்து தற்போதைய தேர்தலிலும் ஆட்சியைத் தக்க வைகக் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவோ எப்படியாவது காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கபளீகரம் செய்ய முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல்களுக்கு முடிவு கட்டிய டெல்லி மேலிடம், அடுத்தடுத்து தலைவர்களையும் தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைத்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் தேர்தலுக்கான குழுக்களையும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வருகை தந்தார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய கேசி வேணுகோபால், இத்தேர்தலில் 75 இடங்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைப்பதும் உறுதி என்றார் நம்பிக்கையுடன்.

Chhattisgarh Assembly Election: Congress will get 75 seats- KC Venugopal

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குமாரி செல்ஜா கூறுகையில், ராய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் வருகை தருவார். பிரியங்கா காந்தியையும் தேர்தல் பிரசாரத்துக்காக அழைத்துள்ளோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+