Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஷ்கர் தேர்தல்.. பாஜக கடும் சவால் அளித்தாலும் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குவது ஏன்? விவரம்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சத்தீஷ்கரில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவினாலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கையே சற்று ஓங்கியுள்ளது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் விஷயம் என்ன என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.

 Chhattisgarh Assembly polls 2023; Congress upper hand in close contest this is the reason

அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.

ஆனால் 2018-ல் தான் அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டியாக உள்ளது. சத்தீஷ்கரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதனால், தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதாவது, நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கியிருக்கும் என்று சொல்கின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது, அங்கு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது ஆகும். 21 முதல் 37 சதவிகித தொகுதிகளில் குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது, 2008 தேர்தலில் 34 தொகுதிகளிலும் 2013 தேர்தலில் 33 தொகுதிகளிலும் 2018ல் 19 தொகுதிகளிலும் 5 சதவீத்த்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலயே வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேபோல சத்தீஷ்கரில் பல தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி கோண்டவனா கனதந்திரா கட்சி மற்றும் ஜனதா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மூன்றாம் இடம் பிடித்தன. இந்த கட்சிகளும் வாக்குகளை பிரிப்பதால் இது காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சில குறிப்பிட்ட பகுதிகளில் வலுவாக உள்ளது. குறிப்பாக தெற்கு பிராந்தியம் மற்றும் பாஸ்டர் டிவிஷன், ஆகிய பகுதிகள் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது.

2013 மற்றும் 2018 தேர்தல்களில் மொத்தம் உள்ள 12 தொகுதிகளில் 8 இடங்களை காங்கிரஸ் மொத்தமாக அள்ளியது. அதேபோல், நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னணி வகிக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு ஓபிசி மற்றும் எஸ்.டி பிரிவினரின் ஆதரவு அதிக அளவு உள்ளது. சத்தீஷ்கரில் பெரும்பாலான ரிசர்வ் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்கு வங்கியே அதிகமாக உள்ளது.

அதேபோன்று காங்கிரஸ் கட்சி, சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுக்க மறுக்கிறது. இது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை வாக்காளர்களிடம் இருந்து சற்று குறைக்கிறது. இது போன்ற சில காரணங்களே சத்தீஷ்கரில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கியிருப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+