சத்தீஸ்கர்: 23 ஆண்டுகளுக்கு பின் வாக்கு பதிவு- மாவோயிஸ்டுகள் இன்றும் தாக்குதல்- டாப் 10 சம்பவங்கள்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சுக்மா மாவட்டத்தில் இன்றும் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Chhattisgarh Election: CRPF jawan injured in IED blast in Sukma

- இன்றைய முதல் கட்ட தேர்தல் 20 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது.

- காலை 8 மணிக்கு இதர 10 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

- இன்று வாக்குப் பதிவு நடைபெறும் சுக்மா மாவட்டத்தின் தொண்டமார்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎப்-ன் கோப்ரா பட்டாலியன் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

- சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க ஏற்கனவே அழைப்பு விடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

- மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அச்சுறுத்தல்களுக்கு நடுவே சுக்மா மாவட்டத்தில் நீண்ட வரிசைகளில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர்.

- சத்தீஸ்கரில் 126 பழங்குடி கிராமங்களில் முதல் முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. நாடு விடுதலைக்குப் பின்னர் 126 கிராமங்களின் பழங்குடி மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்

- சுக்மா மாவட்டத்தின் கரிகுண்டம் பகுதியில் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வாக்குப் பதிவு நடைபெற்றது. சிஆர்பிஎப் வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.

- சத்தீஸ்கரில் காலை 9 மணி வரை மொத்தம் 9.93% வாக்குகள் பதிவாகி இருந்தன.

- ராஜ்நந்தகோன் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் முன்னாள் முதல்வர் ரமண் சிங் வாக்களிப்பதற்கு முன்னதாக வீட்டில் சிறப்பு பூஜை நடத்தினார்.

-2018 தேர்தலில் தற்போது தேர்தல் நடைபெறு 20 தொகுதிகளில் 17-ல் காங்கிரஸ் வென்றதால் இம்முறையும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகவும் நம்பிக்கையுடன் வாக்களிப்பதையும் காண முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+