சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு சாவுமணி அடித்த மகாதேவ் சூதாட்ட செயலி.. சொல்லி அடித்த பாஜக
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாவுமணி அடித்திருக்கிறது மகாதேவ் சூதாட்ட செயலி. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேலுக்கு எதிராக பாஜக முன்னெடுத்த பிரச்சாரம் வீண் போகவில்லை.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும் அத்தனையையும் அடித்து நொறுக்கி பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

பாஜக மேற்கொண்ட பிரச்சார யுக்தி, தேர்தல் வாக்குறுதிகள் சரியான முறையில் கைகொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சத்தீஸ்கரில் அதன் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது என்று பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் கூறினார் பிரதமர் மோடி.
சத்தீஸ்கரை சுற்றிலும் சிறந்த எதிரொலியை உணர்ந்தேன். சத்தீஸ்கரின் கடின உழைப்பாளி மக்கள் தங்கள் மாநிலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு , புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய ஆற்றலால் நிறைந்துள்ளனர். தவறான நிர்வாகம் மற்றும் ஊழலின் பிடியில் இருந்து சத்தீஸ்கரை விடுவிக்க முடியுமென்றால் அது பாஜகவால் மட்டுமே முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். பாஜகவால் மட்டுமே சாதிக்க முடியும் என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.
இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது உறுதி. காங்கிரஸின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. மாறாக பாஜகவின் நல்லாட்சியை மக்கள் நம்புகிறார்கள். பாஜக தனது ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. அனைத்து வகையிலும் பாஜக அரசு உங்களது ஆசைகளை நிறைவேற்றும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
பாஜகவின் பிரச்சார யுக்தி சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேலுக்கு எதிராகவும் திரும்பியது. மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து பூபேஷ் பகேலுக்கு ரூ.508 கோடி கைமாறி உள்ளதாகப் புகார் எழுந்தது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ராய்பூரில் ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் கைதான இடைத்தரகர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மகாதேவ் சூதாட்ட செயலி, துபாயை தலைமை இடமாகக் கொண்டு, இந்தியாவில் இயங்குகிறது. இதன் உரிமையாளர்களாக சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் இருந்து வருகின்றனர். இந்த செயலியில் கோடிக்கணக்கில் பணம் முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்தது. இதனை அடுத்து, மகாதேவ் செயலி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி ரூ.417 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது.
மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேட்டை இந்தியாவின் புதிய சிட் பண்ட் முறைகேடு என்று கூறுகிறார்கள். இந்தியாவில் பொதுவாக 'சிட் ஃபண்ட்' ஊழல் என்று அழைக்கப்படும் பொன்சி திட்ட ஊழல் விசாரணையின் என்ன நடந்ததோ அதேபோன்று இருப்பதால், இதனை சிட் பண்ட் முறைகேட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.
மகாதேவ் செயலி மற்றும் மொன்சி திட்டங்களுக்கு இடையே ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. அது, மக்களின் வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றிய சிட் ஃபண்ட் மோசடி போலல்லாமல், இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த மஹாதேவ் சூதாட்ட செயலி என்று அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ரூ.500 கோடி லஞ்சம் கொடுத்ததாக, மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கின் முக்கிய குற்றவாளி தொலைக்காட்சியில் கூறியுள்ளார். சூதாட்ட செயலி ஊழலுக்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. மகாதேவ் பெயரில் இவர்கள் ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தீவிரவாதிகளும் நக்சலைட்டுகளும் தைரியம் அடைகின்றனர் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றம் மற்றும் கொள்ளையின் ஆட்சிதான் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் காங்கிரஸை அகற்றுவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பாஜக குறிவைத்து செய்த பிரச்சாரம் அதன் வெற்றிக்கு காரணமாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சாவுமணி அடித்துள்ளது மகாதேவ் செயலி ஊழல்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications