Eleven-க்கு ஸ்பெல்லிங் இதுவா? அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் எழுதியதை பாருங்க.. அடக்கொடுமையே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லை. Eleven, Eighteen, Nineteen என்பது கூட எழுத தெரியாமல் தவறாக எழுதிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸின் பூபேஷ் பாகேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பாஜகவின் விஷ்ணு தியோ சாய் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் சில வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோ அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே அடிப்படை ஆங்கிலம் தெரியாமல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் மத்வா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டு கோடாசாட் கிராமம் உள்ளது. இங்கு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை. ஆங்கிலத்தில் Eleven, Eighteen, Nineteen உள்ளிட்டவற்றை எழுத தெரியவில்லை. ஆங்கிலத்தில் தவறாக எழுதினர்.
அதேபோல் மாவட்ட கலெக்டர் யார்? எஸ்பி யார்? என்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதேபோல் பள்ளி குழந்தைகளிடம் நாட்டின் பிரதமர் யார்? மாநில முதல்வர் யார்? என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதனை கேட்டதும் பள்ளி மாணவ -மாணவிகளும் அமைதியாகினர். பதில் தெரியாமல் விழித்தனர்.
இந்த சம்பவம் நடந்த பல்ராம்பூர் மாவட்டம் கேடாசாட் கிராமம் மலை அல்லது வனப்பகுதியையொட்டி ஒதுக்குப்புறத்தில் உள்ள ஊரும் கிடையாது. இங்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் முறையாக சென்று சேருகின்றன. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் இத்தகைய செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கே அடிப்படை ஆங்கிலம் தெரியவில்லையே.. இவர்கள் எப்படி மாணவ-மாணவிகளுக்கு நன்றாக பாடம் கற்று கொடுப்பார்கள். உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications