மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை.. ராய்பூர் நகரை அடல் நகர் என மாற்ற முடிவு!
மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ராய்ப்பூர்: மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன.

அடல் நகர்
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வாஜ்பாயின் பெயர்
மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

குவாலியர் போபால்
அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது.

பாடத்தில் வாஜ்பாய் வரலாறு
அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications