"இதயத்தை பிடுங்கி.. கழுத்து எலும்பை உடைத்து" சத்தீஸ்கர் செய்தியாளர் கொலை! பிரேத பரிசோதனை ரிப்போர்ட்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் தொடர்பாகச் செய்தி வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது உடல் செப்டிக் டேங்கில் மீட்கப்பட்ட நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. தலையில் 12 எலும்பு முறிவுகள், கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதயமும் கிழித்து எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர்.. 28 வயதான இவர் அங்குப் பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்துப் பல செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளார்.

இது மட்டுமின்றி கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை பிடித்து வைத்திருந்த சூழலில், அவரை பத்திரமாக மீட்டு வந்ததிலும் முகேஷின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
மாயமான முகேஷ்:
இந்தச் சூழலில் முகேஷ் சந்திரகர் புத்தாண்டு சமயத்தில் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிய பிறகும் முகேஷை கண்டுபிடிக்க முடியாததாதல் அவரது சகோதரர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த செப்டிக் டேங்கில் முகேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
முகேஷ் சந்திரகரின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், உடலை பிரேச பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர் பிரேதப் பரிசோதனை முடிவுகள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதயத்தைப் பிடுங்கி எரிந்து கொடூரம்:
முகேஷ் சந்திரகர் எவ்வளவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக இருக்கிறது. முகேஷ் சந்திரகர் தலையில் மட்டும் 15 எலும்புகள் முறிந்துள்ளன. மேலும், கழுத்து எலும்பு உடைந்துள்ள நிலையில், இதயமும் கிழிக்கப்பட்டு இருக்கிறது.
28 வயதான பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகரின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கல்லீரல் நான்காகச் சிதைந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், விலா எலும்புகள் ஐந்து இடங்களிலும், தலையில் 15 எலும்பு முறிவுகளும் இருப்பதாகப் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். கழுத்து எலும்பு உடைந்து இருக்கும் சூழலில், இதயம் கூட பிடுங்கி எரியப்பட்டு இருப்பதாக ரிப்போர்ட்டில் கூறியுள்ளனர்.
இப்படியொரு கொடூரத்தைப் பார்த்ததே இல்லை:
தங்கள் பணிக்குச் சேர்ந்தது முதலே இதுபோல ஒரு கொடூரத்தைப் பார்த்தது இல்லை என்றும் மருத்துவர்கள் உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளனர். மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்தே இந்த கொடூர கொலையைச் செய்து இருப்பார்கள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
சத்தீஸ்கரில் ரூ.120 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தப் பணிகளில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவே முகேஷ் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த கொடூர கொலைக்கு சுரேஷ் சந்திரகர் என்ற ஒப்பந்ததாரர் தான் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த ஜனவரி 3ஆம் தேதி சுரேஷ் சந்திரகர் தலைமறைவானார். இதற்கிடையே ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications