சத்தீஸ்கர்: 2–வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்டுகள் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாவோயிஸ்டுகள் நாசவேலைக்காக வைத்திருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் 2-வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் 2-வது கட்ட தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications