திரண்டு வந்த பெண்கள்.. சத்தீஸ்கரில் 'டாப்’ அவங்க தானாம்.. பின்னணியில் காங்கிரஸ், பாஜக செய்த வேலை!
ராய்பூர் : சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆண்களை விட அதிகமான அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாகப் பணியாற்றிய நிலையில், பாஜகவும் செம டஃப் கொடுத்து தேர்தல் பணி ஆற்றியுள்ளது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 70.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 75.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்டங்களையும் சேர்த்து 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கரில் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 2.03 கோடி வாக்காளர்களில் 77.48 லட்சம் ஆண்கள் வாக்களித்துள்ளனர். 78.12 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மொத்தமாக 1.55 கோடி பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட 64 ஆயிரம் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கர் தேர்தலில் அதிகமான பெண்கள் வாக்களித்த போதிலும், பிரதான அரசியல் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 பெண்களை வேட்பாளராக நிறுத்தியது. பாஜக வெறும் 15 பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்தது.
மலிவு விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு கல்வி வசதிகள் மற்றும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும் திட்டங்களையும் பெண்களை மையமாக வைத்து காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு அளித்ததற்கு இந்த வாக்குறுதிகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் 78.21 சதவீத ஆண் வாக்காளர்களும், 76.03 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்ததாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. அங்கு மொத்த வாக்கு சதவீதம் 77.15% என்பது குறிப்பிடத்தக்கது
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications