மும்பையில் பிரபல தாதா சோட்டா ஷகில் கூட்டாளிகள் 2 பேர் கைது; 2 துப்பாக்கிகள் பறிமுதல்
மும்பை: மும்பையில் பிரபல தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்க தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் வர உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
விரைந்து செயல்பட்ட போலீசார் துப்பாக்கி முனையில் காரை மடக்கி, காருக்குள் சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் 2 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருரைவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் அஜ்கர் காசிம் சேக்(39), நசுருத்தீன் சமிமுத்தீன் சேக்(34) என்பதும், தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்த பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டரை மிரட்டி பணம் பறிக்க வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications