ராஜ்யசபா தேர்தலில் 'தமிழரான' ப.சிதம்பரத்தை நிறுத்த கர்நாடகா காங். எதிர்ப்பு!
பெங்களூர்: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து போட்டியிட அந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.கே.ஹரிபிரசாத், பாஜகவின் பிரபாகர்கோரே, எம்.ரமாஜாய்ஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் 3 வேட்பாளர்களும், இதர கட்சிகளின் ஆதரவுடன் 4-ஆவது வேட்பாளரையும் நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.கே.சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, கட்சியின் மேலிட முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.என்.ராஜண்ணா கூறியது:
காவிரி, ஒகேனக்கல் விவகாரங்களில் கர்நாடகத்திற்கு எதிராகவும், தமிழகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்ட ப.சிதம்பரத்தை ராஜ்யசபாவுக்கு கர்நாடகத்தில் இருந்து தேர்வு செய்ய அனுமதிக்கமாட்டோம்.
கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மாறாக நிறுத்தப்பட்டால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிதம்பரத்திற்கு எதிராக வாக்களிப்போம். கட்சித் தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்காததால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க நாங்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications