கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சிதம்பரம்? சித்தராமையா மீண்டும் எதிர்ப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி.யாக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கர்நாடகா எம்.பியாக்க முடியாது என முதல்வர் சித்தராமையா போர்க்கொடி தூக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2010-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, ஆயனூர் மஞ்சுநாத், காங்கிரஸை சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிகிறது. சுயேட்சை எம்.பி. விஜய் மல்லையாவும் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்த 4 இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது.

கர்நாடக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் 2 எம்.பி.க்களையும் பாஜக எம்.பி.யையும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியும். மற்றொரு உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லை. இதனால் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் மும்முரம் காட்டுகின்றன.
காங்கிரஸின் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பாஜகவின் வெங்கையா நாயுடு ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 2-வது உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை கர்நாடகா சார்பில் தேர்ந்தெடுக்கக் கூடாது எனக் கூறி முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக சிதம்பரத்தை தேர்வு செய்ய சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ், மஜத கூட்டணியுடன் எஞ்சிய 3-வது உறுப்பினர் இடத்தை பிடிக்க முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications