உத்தரப் பிரதேசத்தின் கிராமங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: வெளிநாடுகளில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நபர்கள், இம்மாநிலத்தின் கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் நிதி உதவியை அளிக்கலாம் என்று இம்மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்காக மாத்ருபூமி எனும் திட்டத்தையும் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுக்கால ஆட்சியை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்ததில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவே இந்த சாதனையை கொண்டாடும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நபர்கள், இம்மாநிலத்தின் கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் நிதி அளிக்க மாத்ருபூமி எனும் திட்டத்தை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அவர் பேசியதாவது,
"இந்த திட்டம் இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. முதல் நோக்கம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் சொந்த மண்ணுடன் தொடர்பு படுத்திக்கொள்ள இது ஓர் வாய்ப்பு. இரண்டாவது, இந்த திட்டம் மூலம் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும். தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது. எனவே மாத்ருபூமி யோஜனா திட்டத்திற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும்.
முதலில் இந்த திட்டம் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள்தான் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் இதில் சில விதிகள் திருத்தப்பட்டு, தனி நபர்கள் கூட இதற்கு பங்காற்றலாம் என்று மாற்றப்பட்டது. இதில் மேலும் சில மாற்றங்கள் கூட செய்யப்படும். அதாவது, கிராமங்களின் வளர்ச்சிக்காக மட்டும் நிதியளிக்காமல் நகரங்களின் வளர்ச்சிக்காகவும், உட்கட்ட வளர்ச்சிக்காகவும் கூட நிதியளிக்கலாம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications