அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை மழையால் ஒழுகுகிறது.. அர்ச்சகர் குற்றச்சாட்டு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராமர் கோயிலில் வடிகால் அமைப்பு இல்லையென்றும், மேற்கூரை மழைக்கு ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலின்போது ராமர் கோயில் பரபரப்பாக பேசப்பட்டது. ராமருக்கு கோயில் கட்டுவது என்பது பல நூறு ஆண்டுக்கால கனவு என்றும், இந்த கனவு பாஜக ஆட்சியில் நிறைவேறியுள்ளது என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஊர் ஊராக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். குடிசையில் இருந்த ராமரை கோபுரத்திற்கு கொண்டு வந்தது பாஜகதான் என்றும், ராமர் கோயிலை கட்டியதன் மூலம் பொற்காலம் தொடங்கிவிட்டதாக குழந்தை ராமரே கூறுவது போல் உணர்ந்தேன் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இப்படியாக லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்றாலும் கூட, கோயில் திறந்து வைக்கப்பட்டது அரசியல் ஆதாயத்திற்காகதான் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கனமழை பெய்திருக்கிறது. இந்த மழை காரணமாக கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழை நீர் வடிய வடிகால் அமைப்பை கூட செய்யவில்லை என்றும், கருவறையிலேயே மழை நீர் ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோயில் கட்டுவதில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், மழைநீர் தேங்காதவாறு உடனடியாக நடடிவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டையடுத்து கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலுக்கு வந்து, மழைநீர் கசியும் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கசிவை சரி செய்யும்படி கட்டுமான குழுவுக்கு வலியுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கடந்த சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக இந்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. குழந்தை ராமர் சிலைக்கு முன்னரும், விஐபி தரிசன பகுதிக்கு அருகிலும் இந்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. சிறந்த பொறியாளர்களின் மேற்பார்வையில் நடந்த கட்டுமானத்தில் இது எப்படி நடந்தது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருப்பினும் இந்த சிக்கல் உடனடியாக சரி செய்யப்படும்.
வரும் ஜூலை மாதத்திற்குள் முதல் தளத்தின் கட்டுமான பணிகள் முடிவுறும். டிசம்பர் மாதத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையுமென நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். கோயில் மட்டுமல்லாது கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களிலும் வீடுகளில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் உள்ளே புகுந்திருக்கிறது. இதனை அகற்றும் பணியில் அயோத்தி நகராட்சி ஊழியர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. "தியாகிகளின் சவப்பெட்டிகளாக இருந்தாலும் சரி, கடவுளின் கோயிலாக இருந்தாலும் சரி, எல்லாமே பாஜகவுக்கு கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புதான். ஒரு மழைக்கே கோயிலுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது என்பது மோசமான விஷயம். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கோயிலுக்குள் வடிகால் வசதி கூட இல்லாதது அதிருப்தியளிக்கிறது.
இது தவிர ரூ.624 கோடியில் ராம்பாத்தில் கட்டப்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே அவசர அவசரமாக இரண்டாம் தர கட்டுமானப் பணிகளை செய்து அயோத்தியை ஊழலின் மையமாக பாஜக மாற்றியுள்ளது" என்று உ.பி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் விமர்சித்துள்ளார்.
அயோத்தி கோயிலில் வடிகால் வசதி இல்லையென்றும், மழை நீர் கோயில் கருவறைக்குள் ஒழுகுகிறது என்றும் ராமர் கோயிலின் தலைமை பூசாரி குற்றம்சாட்டியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications