Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'மீறிட்டிங்க'.. அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா

Subscribe to Oneindia Tamil

இட்டாநகர்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திற்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில திட்டங்களை தொடங்கி வைக்க வந்திருந்தார். இந்நிலையில், இந்த வருகைக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு திபெத் பகுதியில் இருந்த புத்த மத்தின் தலைவர்கள் மற்றும் உள்ளூர் பெரும் பணக்காரர்கள் சேர்ந்து சீன அரசுக்கு எதிராக தொடர்ந்து பிரச்னைகளை செய்து வந்தனர். இதனையடுத்து சீன ராணுவம் 1951ம் ஆண்டு இவர்களை அடக்கி, திபெத் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அப்படிதான் தலாய் லாமா இங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இப்படி இருக்க இந்த திபெத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் சில இருக்கின்றன. இதனை இந்தயாவும் சீனாவும் தொடர்ந்து சொந்தம் கோரி வருகின்றனர்.

China condemns Amit Shah for coming to India-China border near Arunachal Pradesh

இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை இந்தியா அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி என்றும், சீனா இதனை தெற்கு திபெத்திய பகுதி (ஜாங்னான்) என்றும் உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரம் சில நேரங்களில் மோதல்களாக வெடிப்பதுண்டு. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள 11 கிராமங்களுக்கும் சீனாவின் குடிமையியல் விவகார அமைச்சகம் புதிய பெயர்களை சூட்டியிருந்தது. இது இந்தியாவில் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.

ஏற்கெனவே கிழக்கு லடாக்கில் நடந்த மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான உரசல் போக்கை மேலும் அதிகரித்திருந்த நிலையில் சீனாவின் இந்த புதிய நடவடிக்கை இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடக்கி வைத்திருக்கிறார். இந்த திட்டம் இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டதாகும்.

அதன்படி தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 455 கிராமங்களில் இந்த திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கிராமங்களில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும். தொலைத் தொடர்பு, இணைய வசதி, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், இணைப்பு சாலைகள் ஆகியவற்றை இந்த திட்டத்தின் மூலம் சாத்தியப்படுத்த முடியும். அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது இமாச்சல், சிக்கிம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 2022ம் ஆண்டு முதல் 2026ம் அண்டு வரை சுமார் ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

China condemns Amit Shah for coming to India-China border near Arunachal Pradesh

அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தற்போதுதான் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசம் சென்றிருக்கிறார். இந்தியா-சீனா எல்லையில் உள்ள 'கிபித்தூ' எனும் கிராமத்தில்தான் அவர் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறைக்கான புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த வருகை குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் 'வாங் வென்பின்' கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் அமைச்சர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய 'ஜாங்னான்' பகுதிக்கு வந்திருப்பது என்பது சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறும் செயலாகும். ஏற்கெனவே இந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று முயன்றுக்கொண்டிருக்கையில் இது மேலும் பதற்றத்தைதான் அதிகரிக்கும்" என்று வாங் வென்பின் கூறியுள்ளார். மேலும் 'ஜாங்னான்' சீனாவின் ஒரு பகுதி என்றும் அழுத்தமாக கூறியுள்ளார். முன்னதாக சீனாவின் பெயர் மாற்ற விவகாரங்களை அமெரிக்கா வெளிப்படையாக கண்டித்திருந்தது. மட்டுமல்லாது இந்த சர்ச்சைக்குரிய பகுதியானது இந்தியாவுக்கு சொந்தம் எனவும் வெள்ளை மாளிகை விடுத்திருந்த அறிக்கையில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+