லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு: கார்கிலில் கொந்தளித்த ராகுல் காந்தி.. மோடி பற்றி சொன்ன 'அந்த' வார்த்தை
லடாக்: லடாக்கில் உள்ள நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கார்கில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் மோடி பொய் கூறுவதாகவும் கடுமையாக சாடினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்ன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லடாக்கின் கார்கில் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்வதாகவும் கடுமையாக சாடினார். ராகுல் காந்தி கூறியதாவது:-

லடாக் மிகவும் முக்கியமான பகுதி. சீனா நமது நிலத்தை பறித்து இருக்கிறது என்ற ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளுடனான மீட்டிங்கில் லடாக்கில் ஒரு இன்ச் நிலம் கூட சீனாவால் அபகரிக்கப்படவில்லை என பிரதமர் மோடி கூறியது வருத்தத்திற்கு உரியது. ஏனெனில் பிரதமர் அவ்வாறு கூறியது பொய். லடாக்கில் சோலார் மின் சக்திக்கு பற்றாக்குறை இல்லை.
பாஜகவை சேர்ந்தவர்களுக்கும் இது தெரியும். லடாக் மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்குள்ள இடத்தை அவர்கள்(சீனா) பறிக்க விரும்புகிறார்கள்" என்றார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையே இன்பார்மல் (அதிகாரப்பூர்வமற்ற) சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பின் போது இந்திய சீன எல்லையில் அமைதியை நிலைநட்ட வேண்டும் என்பது குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தான் ராகுல் காந்தி கார்கில் லடாக்கில் சீனா ஆக்கிரமித்து இருப்பதாகவும் பிரதமர் மோடி அதை மறைபப்தாகவும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த் இருக்கிறார். ரகுல் காந்தி தனது பேச்சில் பாரத் ஜோடா யாத்திரை குறித்தும் பேசினார்.

ராகுல் காந்தி கூறியதாவது:- "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வெறுப்புணர்வுக்கு எதிரானது பாரத் ஜோடோ யாத்திரை. பாரத் ஜோடோ யாத்திரையின் போது என்னால் லடாக் வர முடியவில்லை. இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. எனது மனதில் லடாக்கில் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இந்த முறை பைக் மூலமாக அதை முன்னெடுத்து சென்றேன். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிற தலைவர்கள் பிசியாக இருக்கிறார்கள். நான் உங்களின் மன் கி பாத் (மனதில் குரல்) கேட்க வேண்டும் என நினைத்தேன். ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. காந்தி மற்றும் காங்கிரசின் சித்தாந்தம் லடாக்கின் இரத்தம் மற்றும் டி.என்.ஏவில் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications