லடாக்.. அனைத்து எல்லைகளிலும் படைகள், ஆயுதங்கள் குவிப்பு.. முழு வீச்சில் தயாரான இந்திய படை..திருப்பம்
லடாக்: லடாக்கில் இருக்கும் அனைத்து எல்லை பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்களில் ஆயுதங்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
லடாக்கில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 29 மற்றும் 30 தேதிகளில் லடாக்கில் சீனா அத்துமீற முயன்றது. பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் படைகள் அத்துமீற முயன்றது.
ஆனால் சீனாவின் இந்த முயற்சி கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. சீனாவின் படை வீரர்கள் 300 பேர் வரை எல்லையில் அத்துமீற முயன்றது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் அத்துமீறல்
இந்த நிலையில் தற்போது லடாக்கில் இந்திய ராணுவம் சார்பாக படைகள் குவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் அனைத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடி இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

எத்தனை பேர்
எல்லையில் 45 ஆயிரத்திற்கும் அதிகமாக படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் அதிக அளவில் படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இங்கு மொத்தம் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. இதில் 4 கட்டுப்பாட்டு பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இதில்தான் இந்தியா தற்போது பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.

ஆயுதங்கள் குவிப்பு
அதேபோல் லடாக்கில் பாங்காங் திசோ பகுதியில் நவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நேற்று இரவில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. திடீர் தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்க வேண்டும். கடந்த ஜூலை 6ம் தேதிக்கு பின் பாங்காங் திசோவில் குறிப்பிட்ட சில எல்லையில் இருந்து இந்தியா படைகளை வாபஸ் வாங்கி கொண்டது. அங்கு இருந்த ஆயுதங்கள் நீக்கப்பட்டது

மீண்டும் கொண்டு வந்துள்ளனர்
இந்த நிலையில் தற்போது மீண்டும் எல்லைக்கு ஆயுதங்களை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக சின்னுக் ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இதில் அதிக அளவில் ஆயுதங்களை எடுத்து செல்ல முடியும். அதிக எடை சுமக்கும் ஹெலிகாப்டர் ஆகும் இது. இதில் வீரர்களை வேகமாக எல்லைக்கு கொண்டு சென்று அங்கே இந்தியா குவித்து வருகிறது.

பேச்சுவார்த்தை எப்படி
இன்னொரு பக்கம் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இந்தியா - சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.லடாக் சுசூல் பகுதியில் இரண்டு நாட்டு படை சார்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 9.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. பிரிகேட் ரேங்க் கொண்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.












Click it and Unblock the Notifications