சீன மக்களின் கடும் எதிர்ப்பு.. ராணுவ வீரர்கள் பலியானது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட சீனா.. எத்தனை பேர்?

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்து இருக்கிறார்.

Recommended Video

    India China Border Fight-ல் இறந்த சீன வீரர்கள் பற்றி வாய் திறந்த China

    இந்தியா - சீனா இடையே எல்லையில் தீவிரமான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த லடாக் மோதலில் மொத்தம் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மொத்தம் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் மட்டுமே வருகிறது.

    அங்கு நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் அங்கு தோல்வியில் முடிந்து இருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    கல்வான் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. இது தொடர்பாக சீனா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. வீரர்கள் பலியானது குறித்து சீனா தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருகிறது. இதனால் சீனாவின் பக்கம் அதிகமான வீரர்கள் பலியாகி இருக்கலாம். அதனால்தான் சீனா இதை மறைக்கிறது என்றும் கூட கூறப்படுகிறது.

    என்ன பதில்

    என்ன பதில்

    இது தொடர்பாக சீனா திமிராகவும் கருத்து தெரிவித்து வந்தது. சீனா வீரர்களின் பலி எண்ணிக்கை குறித்து சொன்னால் அது இந்தியாவிற்க்குத்தான் சிக்கல். சீன வீரர்களின் பலி எண்ணிக்கை குறித்து இந்தியா பொய் சொல்கிறது. நாங்கள் உண்மையான எண்ணிக்கையை சொன்னால் இந்தியாதான் அதனால் பாதிக்கும். நிலைமை மோசமாகும் என்று சீனா திமிராக பேசியது. ஆனால் உண்மையான பலி எண்ணிக்கையை தெரிவிக்கவே இல்லை.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    சீனா இதை தொடர்ந்து மறைத்து வருவது அந்த நாட்டு மக்களை கோவம் அடைய வைத்துள்ளது. அரசுக்கு எதிராக Weibo இணையத்தில் கடுமையான கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கடுமையாக பேசி வருகிறார்கள். இப்படி ராணுவ வீரர்களின் மரணம் குறித்து கூட உண்மைகளை சீனா சொல்லாமல் இருக்கிறது. இது மிகவும் தவறு என்று அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர்.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    இந்த நிலையில் புதிய திருப்பமாக லடாக்கில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் சீன வீரர்கள் பலியானது உண்மைதான் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்து இருக்கிறார். எங்கள் பக்கமும் வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள். சீனா வீரர்கள் சிலர் பலியானதாக வெளியாகும் செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார். இரண்டு பக்க வீரர்களும் மோசமாக தாக்கிக் கொண்டதில் இறப்பு நிகழ்ந்துள்ளது.

    ஆனால் சொல்லவில்லை

    ஆனால் சொல்லவில்லை

    ஆனால் இந்த சண்டையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. சீன வீரர்களின் பலி எண்ணிக்கை குறித்த விவரத்தை அவர் வசதியாக மறைத்துவிட்டார். இதனால் சீன தரப்பில் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என்கிறார்கள்.தற்போது மக்களின் அழுத்தம் காரணமாக பலி குறித்து சீனா ஒப்புக்கொண்டு உள்ளது. விரைவில் பலி எண்ணிக்கை குறித்தும் சீனா விவரங்களை வெளியிடும் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+