எதிர்பார்த்த இந்திய படை.. நினைத்தபடி உள்ளே வந்த சீனா.. ஓடவிட்ட ராணுவம்.. நேற்று இரவு என்ன நடந்தது?
லடாக்: லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறிய நிலையில், சீனாவின் படைகள் எப்படி திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
லடாக் பிரச்சனை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கு மீண்டும் சீனா பிள்ளையார் சுழி போட்டுள்ளது. கடந்த ஜூலை 6ம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் பிரச்சனையில் சமரசம் எட்டப்பட்டது. எல்லையில் இரண்டு நாடுகளும் அத்துமீற கூடாது , 2 கிமீ பின்வாங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதைத்தான் தற்போது சீனா மீறியுள்ளது.

இந்தியா எதிர்பார்த்தது
பாங்காங் திசோவில் சீனா ஊடுருவ முயன்றுள்ளது. ஆனால் சீனாவின் படைகள் பாங்காங் திசோவில் அத்துமீறும் முன்பே அதை இந்தியாவின் படைகள் தடுத்து நிறுத்தியது. தயாராக எல்லையில் காத்து இருந்த இந்திய படைகள் சீனாவின் படைகளை தடுத்து நிறுத்தியது. 29 மற்றும் 30ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. படைகளை உள்ளே விடாமல் துணிச்சலாக இந்திய வீரர்கள் சீன வீரர்களை விரட்டி அடித்தனர்.

எப்படி நடந்தது
அது எப்படி இந்தியாவிற்கு சீனாவின் அத்துமீறல் சரியாக தெரிந்து இருக்கிறது. எப்படி சீனாவின் வருகையை எதிர்பார்த்தது என்று கேள்வி எழலாம். இந்திய ராணுவம் கூட, தனது செய்தி குறிப்பில் சீனாவின் அத்துமீறலை எதிர்பார்த்தோம் என்று கூறியுள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. சீனா கண்டிப்பாக எல்லையில் அத்துமீறும் என்பது இந்திய ராணுவம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

எதிர்பார்த்த மூவ்
முன்னதாக ஜூலை மாதம் லடாக் எல்லையில் சீனா - இந்தியா அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடந்து இரண்டே வாரங்களில் எல்லையில் சீனாவின் படைகள் அத்துமீறியது. இதில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பேச்சுவார்த்தையில் தலையை ஆட்டிவிட்டு அதன்பின் அத்துமீறுவதே சீனாவின் ஸ்டைல் என்பது இந்தியாவிற்கு தெரிந்ததே. அதனால் எல்லையில் சீனாவின் வருகையை இந்தியா எதிர்பார்த்தே இருந்தது.

ராஜ்நாத் சிங்
இதற்கு முன்பே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து கணித்து இருந்தார். அதில், எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இப்போது என்னால் எதையும் உறுதி அளிக்க முடியாது. எல்லையில் என்ன நடக்கும். சீனா மொத்தமாக பின்வாங்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. அதனால் ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும், என்று ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருந்தார். இதனால் வீரர்களும் தயாராக இருந்தனர்.

தயார் நிலை
அவர் சொன்னது போலவே தற்போது எல்லையில் சீனா அத்துமீறியது. ஜூலை மாதம் எப்படி அத்துமீறியதோ அதுபோல் அத்துமீறியது. இதனால் சீனாவை எளிதாக இந்தியா தடுத்துள்ளது. இந்திய வீரர்களின் சரியாக திட்டமிடல் அசம்பாவிதத்தை தடுத்துள்ளது.

செம மூவ்
முன்னதாக எல்லைக்கு பாங்காங் திசோ அருகே சீனா படகுகளை கொண்டு வந்தது. அப்போது குளிர் காலத்தில், நவம்பர், டிசம்பரில் சீனா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டது. வின்டர் அட்டாக்கிற்கு சீனா தயாராகிறது என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தற்போது ஊடுருவ முயன்றுள்ளது.. இருந்தாலும் இந்திய ராணுவம் தயாராக இருந்த காரணத்தால் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications