ஒரு பக்கம் ஷூட்டிங்.. படைகள் குவிப்பு.. இன்னொரு பக்கம் முப்படை தளபதிகள் அவசர மீட்டிங்.. பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் சீனா துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தற்போது முப்படை தளபதிகளின் அவசர மீட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனை தளபதிகள் மூவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

லடாக்கில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீன ராணுவம் நேற்று இரவு புகார் வைத்தது. லடாக்கில் எல்லை மீறி தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் இந்திய ராணுவம் மீது புகார் வைத்தது.

இதனால் லடாக்கில் திடீரென போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் லடாக்கில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் புகாரை இந்தியா மறுத்துள்ளது.

மறுப்பு தெரிவித்தது

மறுப்பு தெரிவித்தது

இந்தியா தெரிவித்த மறுப்பு அறிக்கையில் லடாக் எல்லையில் இந்தியா இதுவரை அத்துமீறவில்லை. லடாக் எல்லையில் எப்போதும் இந்தியா அத்துமீறியது இல்லை. எல்ஏசி பகுதியை இந்தியா கடந்தது இல்லை. லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை, என்று இந்தியா கூறியுள்ளது.

லடாக் நிலை

லடாக் நிலை

இந்த நிலையில் லடாக்கில் நிலைமை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு நடத்தினார். லடாக்கில் சீனா ஏன் துப்பாக்கி சூடு நடத்தியது. எதனால் பிரச்சனை உருவானது. தற்போது நிலைமை எப்படி இருக்கிறது. இனி எல்லையில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி நரவனே விளக்கினார்.

மீட்டிங் முடிந்தது

மீட்டிங் முடிந்தது

லடாக் குறித்து ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங் முடிந்த நிலையில் தற்போது முப்படை தளபதிகளில் அவசர மீட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனை தளபதிகள் மூவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். முப்படை தளபதி பிபின் ராவத் இதற்காக தற்போது டெல்லி பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர். எல்லையில் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர்.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

இன்னொரு பக்கம் எல்லையில் இந்தியா படைகளை குவித்து வருகிறது. லடாக் அருகே பாங்காங் திசோவில் இந்தியா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. பாங்காங் திசோவில் இரண்டு நாட்களுக்கு முன் சீனா தனது 10000 வீரர்களை களமிறக்கியது. தற்போது கூடுதலாக 10000 வீரர்கள் சீன ராணுவம் மூலம் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியாவும் படைகளை குவித்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+