நடுஇரவில் "மைனஸ் டிகிரி" குளிரில் நடந்த சண்டை.. காயத்தால் வீரமரணம் அடைந்த வீரர்கள்.. பகீர் பின்னணி!

லடாக்கில் நேற்று முதல் நாள் இரவு மற்றும் நேற்று அதிகாலை நடந்த சண்டை குறித்து இந்திய ராணுவம் முழு விவரத்தை வெளியிட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் நேற்று முதல் நாள் இரவு மற்றும் நேற்று அதிகாலை வரை நடந்த சண்டை குறித்து இந்திய ராணுவம் முழு விவரத்தை வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video

    India China border-ல் 20 இந்திய வீரர்களை கொன்ற சீன ராணுவம்..பதிலடிக்கு தயாராகும் இந்தியா

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சண்டை நடந்து வந்தது. லடாக் எல்லையில் கடந்த மே 5ம் தேதி சீனாவின் ராணுவம் அத்துமீறியது. அப்போது தொடங்கிய சண்டை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இடையில் கடந்த வாரம் இரண்டு நாட்டு ராணுவம் சார்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து லடாக்கில் கல்வான் பகுதியில் இருந்து மட்டும் சீனாவின் ராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றது.

    சண்டை வந்தது

    சண்டை வந்தது

    இந்த நிலையில் கல்வான் பகுதியில் வேறு சில இடங்களில் சீன ராணுவம் முகாமிட்டு இருந்தது. அதேபோல் இன்னொரு பக்கம் பாங்காங் திசோ பகுதியிலும் சீனாவின் ராணுவம் முகாமிட்டு இருந்தது. இதில் சீனாவின் ராணுவம் நேற்று முதல் நாள் கல்வான் பகுதியில் ஒரு சில கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து பின்வாங்குவதாக இருந்தது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி (Colonel) சீன வீரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த சென்று இருக்கிறார்.

    எப்போது சென்றார்

    எப்போது சென்றார்

    சரியாக திங்கள் கிழமை இரவு 11 மணிக்கு மேல் கல்வான் பகுதியில் இந்த பின்வாங்கும் நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி (Colonel) சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20+ வீரர்கள் அங்கு எல்லையில் பேச சென்று இருக்கிறார்கள்.அமைதி பேச்சுவார்த்தை என்பதால் ஆயுதங்கள் இல்லாமல் சென்றதாக தகவல்கள் வருகிறது.

    சண்டை வந்தது

    சண்டை வந்தது

    ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சீனாவின் படைகள் பின்வாங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக எழுந்த விவாதம் அப்படியே சண்டையில் முடிந்து உள்ளது. இரண்டு நாட்டு ராணுவ தரப்பும் மாறி மாறி கைகளால் சண்டை போட்டு இருக்கிறார்கள். அதோடு மாறி மாறி கற்கள் மற்றும் குச்சிகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இந்த சண்டையில்தான் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

    மரணம்

    மரணம்

    இதுதான் சண்டைக்கான முழு பின்னணி ஆகும். இதில் சம்பவ இடத்திலேயே இந்திய ராணுவ அதிகாரி (Colonel) சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 3 பேர் பலியாகிவிட்டனர். மீதம் உள்ள 17 வீரர்கள் பலத்த காயத்துடன் லடாக் எல்லையில் இருந்துள்ளனர். மிக மோசமான குளிரில் அவர்கள் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இப்படி மைனஸ் டிகிரி குளிரில் அவர்கள் காயங்களுடன் போராடியதால், வீரமரணம் அடைந்து உள்ளனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

    சீனாவின் தரப்பு

    சீனாவின் தரப்பு

    இந்த நிலையில் இந்த எல்லை சண்டையில் சீனாவின் தரப்பில் 43 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. அதேபோல் இந்தியா சீனாவை குற்றஞ்சாட்டுவது போல சீனா இந்தியா மீது எல்லை தாண்டியதாக பழி போடுகிறது. இந்த சண்டையை தொடர்ந்து நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு நாட்டு படைகள் எல்லையில் பின்வாங்கி இருக்கிறது. ஆனால் இது தற்காலிக நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+