உறுதி அளிக்க முடியாது.. ராஜ்நாத் சிங் சொன்ன விஷயம்.. படைகளை வாபஸ் வாங்காத சீனா.. என்ன நடக்கிறது?
லடாக்: லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பி வந்தாலும் கூட எல்லையில் இருந்து சீனா இன்னும் முழுமையாக படைகளை திரும்ப பெறவில்லை. இதனால் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது.
Recommended Video
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனை முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லடாக் எல்லையில் கடந்த மே மாதம் 5ம் தேதியில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிக் கொள்வதகாக சீனா அறிவித்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் நடந்த மீட்டிங்கிற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் நிலைமை
ஆனால் லடாக் எல்லையில் இருக்கும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை. அங்கு இருக்கும் கட்டுப்பாட்டு பக்தி 15ல் இருந்து சீனா இன்னும் படைகளை வாபஸ் பெறவில்லை. அதிலும் இந்தியாவின் எல்லை பகுதிக்குள் 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை சீனாவின் படைகள் இங்கே புகுந்து உள்ளது. இந்திய ராணுவ படை அங்கே நடத்திய சோதனையில் இந்த விஷயம் அம்பலம் ஆகியுள்ளது .

எப்படி இருந்தது
இந்த பகுதிக்குள் சீனா கடந்த மாதம் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்தது. அதன்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் 2.5 கிலோ மீட்டர் தூரம் பின் வாங்கியது. அதன்பின் மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சீன படைகள் பின்வாங்கி உள்ளது. இன்னும் அங்கே 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா படைகளை குவித்து உள்ளது. இங்கு இருந்து இந்தியா தனது படைகளை 2.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி உள்ளது.

மீறி உள்ளதஹு
இரண்டு நாட்டு அமைதி பேச்சுவார்த்தையின் படி எல்லையில் 80க்கும் அதிகமான வீரர்கள் ரோந்து செல்ல கூடாது. அதேபோல் இவர்கள் நடந்து மட்டுமே ரோந்து செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இதையும் மீறி இன்னும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனா தனது படைக்களை வாபஸ் வாங்காமல் இருக்கிறது. எல்லையில் மிக மோசமான நிலை நிலவ வில்லை என்றாலும் கூட, சீனாவின் இந்த செயலால் கொஞ்சம் பதற்றம் நிலவி வருகிறது.

ராஜ்நாத் சிங் சொன்னது என்ன
இதைத்தான் எல்லைக்கு சென்று வந்த பாதுகாப்ப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உறுதி செய்து இருந்தார். லடாக் சென்ற அவர் அளித்த பேட்டியில், இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டது வருகிறது.ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது, என்று கூறியுள்ளார்.

எல்லை பிரச்சனை
எல்லையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் சிலரும் இதைத்தான் கூறுகிறார்கள். அதாவது சீனா மொத்தமாக படைகளை வாபஸ் வாங்கும் என்று நம்ப முடியாது. எல்லையில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சீனா முழுவதுமாக பின்வாங்கும் வரை எல்லையில் படைகளை ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவோம். உடனே படைகளை வாபஸ் பெறுவது என்பதும் நடக்காத காரியம்தான், என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் .
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications