ஒரு குண்டு கூட பாயவில்லை.. லடாக்கில் கற்கள், குச்சிகளால் மட்டும் நடந்த கொடூர சண்டை.. பகீர் காரணம்!
லடாக்: இந்தியா சீனா இடையில் நேற்று லடாக் எல்லையில் நடந்த சண்டையில் துப்பாக்கிகள், குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க கற்களை வைத்து தாக்கி சண்டை நடந்துள்ளது.
Recommended Video
லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர்.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது.

துப்பாக்கி ஆயுதம்
இந்த நிலையில் இந்த இரண்டு நாட்டு சண்டையில் நேற்று ஒரு குண்டு கூட பாயவில்லை. இரண்டு நாட்டு வீரர்களும் நவீன ஆயுதங்களை வைத்து இருந்தனர். ஆனாலும் இவர்கள் யாரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளவில்லை. எந்த விதமான நவீன ஆயுதங்களையும் இந்த சண்டையில் பயன்படுத்தவில்லை. ஆனாலும் கூட இந்த சண்டையில் இந்திய தரப்பில் 3 பேரும், சீன தரப்பில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

கற்கள்
நேற்று நடந்த சண்டை முழுக்க முழுக்க குச்சிகள், மற்றும் கற்களால் நடந்த சண்டை ஆகும். மாறி மாறி இரண்டு தரப்பும் எல்லையில் கற்களை வீசி இருக்கிறது. சீனாதான் முதலில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறி இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாதான் அத்துமீறியது என்று சீனா கூறி வருகிறது. அதேபோல் சீனாவின் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அடிக்கடி தாக்குதல்
இதற்கு முன்பே இப்படி எல்லையில் வீரர்கள் கற்களை வைத்து சண்டை போடும் சம்பவங்கள் நடந்து உள்ளது. லடாக் எல்லையில் பாக்காங் திசோ அருகே பகுதியில் இந்தியா வீரர்களை இதேபோல் கற்களை வைத்த சீன ராணுவம் தாக்கியது. மேலும் மே 28ம் தேதி இதேபோல் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்கள் இடையே எல்லையில் கற்களை வைத்து தாக்கி சண்டை நடந்தது.

சிக்கிம்
இதேபோல் சிக்கிமிலும் கடந்த மே மாதம் தொடக்கத்தில் சீன ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் இடையில் எல்லையில் சண்டை வந்தது. அப்போது குச்சிகளை வைத்து சீன ராணுவம் இந்திய வீரர்களை தாக்கியது. பொதுவாக இந்தியா - சீனா இடையே எல்லையில் சண்டை வந்தால் துப்பாக்கி குண்டுகள் வைத்து எல்லாம் தாக்குதல் நடக்காது. குச்சி - கற்களை வைத்து மட்டுமே சண்டை நடக்கும்.

ஏன் காரணம்
கடந்த இந்தியா - சீனா இடையிலான லடாக் போருக்கு பின் 1975ல் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு நாட்டு வீரர்களும் அதன்பின் எல்லையில் துப்பாக்கி மூலம் தாக்கியதே இல்லை. இதனால் எப்போது சண்டை நடந்தாலும் துப்பாக்கி இல்லாமல் மட்டுமே நடக்கும். இதனால்தான் நேற்றும் இரவு நடந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications