அதை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம்.. 20 வீரர்கள் வீரமரணம் பற்றி ராஜ்நாத் சிங் உருக்கம்..டிவிட்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்திய வீரர்களின் தியாகத்தை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட் செய்துள்ளார்.

லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது.

China standoff with India: The Nation will never forget their bravery and sacrifice says Rajnath Singh

அடுத்து எல்லையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை மேஜர்கள் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எல்லை நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது டிவிட் செய்துள்ளார்.

அதில், எல்லையில் இந்திய வீரர்களின் உயிர் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது. நமது வீரர்கள் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர்.இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளை அவர்கள் கடைபிடித்தனர்.மிகவும் தைரியமாக அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

இந்திய வீரர்களின் தியாகத்தை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம். எல்லையில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். மிக மோசமான இந்த காலத்தில் நமது தேசம் தோளோடு தோள் கொடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது வீரர்களின் வீரம் மற்றும் தைரியம் எனக்கு பெருமை அளிக்கிறது., என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட் செய்துள்ளார்.

Recommended Video

    India-வை சீண்டினால் பதிலடி கொடுப்போம்.. மோடி எச்சரிக்கை

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+