லடாக் எல்லைக்கு வந்த ஹெலிகாப்டர்கள்.. அதிகாலையில் மீட்கப்பட்ட சீன வீரர்களின் உடல்கள்.. பரபர பின்னணி!
லடாக்: லடாக் எல்லையில் நேற்று முதல்நாள் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட சீன வீரர்களின் உடல்களை சீனாவை சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்டு கொண்டு சென்று இருக்கிறது.
Recommended Video
லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேபோல் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர்.

சீனா மரணம்
இந்த சண்டையில் சீனாவின் தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. சீனாவின் தரப்பில் 43 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. சீனா இது தொடர்பாக இன்னும் வாய் திறக்கவில்லை. உண்மையில் சீனா தரப்பில் நிறைய மரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. சீனா இதை வெளியே சொல்லாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குறைத்து காட்டும்
சீனா எப்போதும் தனது தரப்பில் பலி எண்ணிக்கை ஏற்பட்டால் அதை குறைத்து காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு ராணுவ சண்டைகளில் இறப்பு ஏற்பட்ட நேரங்களில் கூட முழுமையான எண்ணிக்கையை சீனா எப்போதும் பெரிய அளவில் வெளியிட்டது கிடையாது. 1962, 67ல் நடந்த போரிலும் கூட சீனா தனது பக்கத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை மறைத்ததாக புகார் உள்ளது.

ஆனால் காட்டிக்கொடுத்தது
இந்த நிலையில் நேற்று அதிகாலை லடாக் எல்லையில் சண்டை முடிந்த பின் கல்வான் பகுதிக்கு சீன ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது. சீனா தரப்பில் உயிர் இழந்த வீரர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர்களை சீன ராணுவம் அனுப்பி உள்ளது. அங்கிருந்து உடல்களை எடுத்துக் கொண்டு, சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர் திரும்பி சென்றுள்ளது. 40+ வீரர்களின் உடல்களை மீட்க சீனா ஹெலிகாப்டரை அனுப்பி உள்ளது.

அதிக உடல்கள்
அதிக அளவில் உடல்கள் இருந்ததால் இரண்டு ஹெலிகாப்டரில் உடல்களை வைத்து எடுத்து சென்று இருக்கிறார்கள். இதனால் சீனாவின் தரப்பில் கண்டிப்பாக அதிக எண்ணிக்கையில் பலி ஏற்பட்டு இருக்கிறது. சீனா வேண்டும் என்றே அதை மறைக்கிறது. விரைவில் இது தொடர்பான விவரங்கள் வெளியாகும். சீனாவின் நாடகங்கள் அம்பலம் ஆகும் என்று கூறுகிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications