லடாக், டோக்லாம் வரிசையில் அடுத்து அருணாசலப் பிரதேசம்? 5 இந்தியர்களை கடத்திச் சென்ற சீனா ராணுவம்

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: லடாக், டோக்லாம் வரிசையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவின் குடைச்சல் தொடங்கிவிட்டது. அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 இந்தியர்களை சீனா ராணுவம் கடத்திச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Recommended Video

    Arunachal Pradesh-ல் நுழைந்து 5 இந்தியர்களைக் கடத்திய China Army | Oneindia Tamil

    லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் லடாக்கில் அத்துமீறி ஊடுருவுவதை வழக்கமாக வைத்திருக்கிறது சீனா.

     தப்பி ஓடும் சீனா

    தப்பி ஓடும் சீனா

    கடந்த காலங்களைப் போல் இல்லாமல் லடாக்கில் எந்த முனையில் ஊடுருவ முயன்றாலும் சீனாவுக்கு சரியான பதிலடி தர இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஊடுருவலின் போதும் சீனா ராணுவம் நிலை குலைந்து தப்பி ஓடி வருகிறது.

     பூட்டானின் டோக்லாம்

    பூட்டானின் டோக்லாம்

    லடாக்கைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில எல்லைகளிலும் சீனா வாலாட்ட முயன்று வருகிறது. அண்மையில் பூட்டான்-இந்தியா-சீனா சந்திப்பு பகுதியான டோக்லாம் அருகே பிரமாண்ட கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டிருவதை செயற்கைக் கோள் படங்கள் அம்பலப்படுத்தி இருந்தன.

     வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுடன்..

    வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுடன்..

    இதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள், ஆயுத பயிற்சியையும் சீனா அளித்து வருகிறது. அண்மையில் மணிப்பூரில் ராணுவத்தினர் மீதான வடகிழக்கு மாநில பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் சீனா இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மியான்மர் எல்லையில் சீனா தயாரிப்பு ஆயுதங்களும் அண்மையில் ஏராளமாக கைப்பற்றப்பட்டும் இருந்தன.

     அருணாச்சலில் இந்தியர்கள் கடத்தல்

    அருணாச்சலில் இந்தியர்கள் கடத்தல்

    இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறு ஊடுருவி 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள அப்பர் சுபன்ஶ்ரீ மாவட்டத்தின் சேரா 7 பகுதியில் இருந்து 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்தியிருக்கிறது. 5 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவம் கடத்திச் சென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ, நினோங் எரிங் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

    அருணாச்சலில் 2-வது முறையாக கடத்தல்

    மேலும் இந்தியர்களை சீனா 2-வது முறையாக கடத்திச் சென்றுள்ளது. சீனாவின் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி 5 பேரையும் சீனா ராணுவம் கடத்தியிருக்கிறது. மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துக் கொண்டிருக்கிறது சீனா. அதேநேரத்தில் அருணாசலப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவத்திலும் சீனா ஈடுபட்டிருப்பது இருதரப்பு உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+