பீகாரில் ஆட்டத்தை மொத்தமாக கலைக்கும் பிரசாந்த் கிஷோர்.. பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டம்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பாஜக மற்றும் ஆர்ஜேடி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பீகார் தேர்தல் களத்தில் முதல்முறையாகக் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர் முக்கிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
பீகார் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அங்குத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பீகார் தேர்தலில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி உடன் பிரசாந்த் கிஷோர் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெலியாகியுள்ளன..

3வது அணி?
தற்போதுள்ள அரசியல் சூழலில் வாய்ப்புகள் எப்போதும் திறந்தே இருப்பதாக லோக் ஜனசக்தி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது அங்கு அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்போது லோக் ஜனசக்தி கட்சி அங்கு பாஜக கூட்டணியில் இருக்கிறது. என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் சூழலில், திடீரென பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சியுடன் கூட்டணி எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவே அங்கு பேசுபொருள் ஆகியுள்ளது.
சிராக் பாஸ்வான்
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிராக் பாஸ்வான் 5 இடங்களில் போட்டியிட்டு, 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இதனால் இந்த முறை பீகார் சட்டசபைத் தேர்தலில் 40 தொகுதிகளைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாஜக 25 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. இருப்பினும், அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க பாஜக ரெடியாக இல்லையாம்.
இதன் காரணமாக பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைப்பது குறித்து லோக் ஜனசக்தி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இரு தரப்பும் கூட்டணி அமைப்பார்களா என்றால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்ல வேண்டும்.
என்ன திட்டம்
ஏனென்றால் பீகார் அரசியலில் இருவரும் தனித்துவம் மிக்கவர்கள். பிரசாந்த் கிஷோர் நன்கு தெரிந்த ஒரு முகம் என்றாலும் அவர் தேர்தல் களத்திற்குப் புதியவர். அவருடன் கூட்டணி அமைத்தால் அதிகத் தொகுதிகளில் போட்டியிட முடியும் என்றாலும் வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகமே.. இதனால் முதல்வர் கனவில் இருக்கும் பாஸ்வான், இந்த முறை பிகே உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு.
வாய்ப்பு குறைவு
பீகாரில் ஏற்கனவே பாஜக- ஜேடியு மற்றும் காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி இருக்கிறது. இரண்டுமே வலுவான கூட்டணி தான். போட்டியும் கடுமையாக இருக்கிறது. எனவே, அந்தக் கூட்டணியைத் தாண்டி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை வெல்வது கிட்டத்தட்ட முடியாத காரியம். இது சிராக் பாஸ்வானுக்கும் நன்கு தெரியும். பிறகு ஏன் கூட்டணிக்கு ரெடி என்று லோக் ஜனசக்தி கட்சி கூறுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் வரும்.
அதுவும் பாஸ்வானின் திட்டம் தான். ஏனென்றால் பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுக்கள், தொகுதி பங்கீட்டில் பாஜக மீது அழுத்தம் கொடுக்கும் என்று எல்ஜேபி நம்புகிறது. இதன் மூலம் கூடுதல் தொகுதிகளைப் பெற முடியும் என்பதே அவர்கள் திட்டமாகும்.
பிரசாந்த் கிஷோர்
இதற்கிடையே பிரசாந்த் கிஷோரும் கூட பாஸ்வான் உடன் கூட்டணி இல்லை என்று விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பீகாரைக் கொள்ளையடிக்கக் கடுமையான போட்டி நடக்கிறது.. இது வெறும் சில இடங்களுக்கான போராட்டம் இல்லை.. மாறாக, பீகாரை எதிர்காலத்தை பற்றியது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை.. எங்கள் கூட்டணி என்பது பீகார் மாநில மக்களுடன்தான்" என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications